Tuesday, February 18, 2020

மஹா சிவராத்திரி லட்சார்ச்சனை கட்டணம்

Added : பிப் 18, 2020 01:52

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 21ம் தேதி, மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரியான, 21ம் தேதி காலை, 5:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, லட்சார்ச்சனை நடைபெறும்.இதில், பங்கு பெற விரும்பும் பக்தர்கள், ஒரு நபருக்கு, 200 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.அன்றிரவு, 7:30 மணிக்கு, முதல் கால பூஜை; இரவு, 11:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி மூல கருவறையின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024