Friday, February 21, 2020

விபத்துக்கு காரணம் டிரைவர் மட்டுமா?

Added : பிப் 20, 2020 21:53

நள்ளிரவு தாண்டி, அதிகாலை வரையிலான நேரம், டிரைவர்களை அசதிக்குள்ளாக்கும் தருணம். இதனால், தன்னையறியாமல் டிரைவர் துாங்கி விடுவதுண்டு. இதனால், சுங்கச்சாவடி அல்லது உகந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி, ஓய்வெடுத்து, டீ உள்ளிட்ட பானங்களை அருந்தி, சோர்வு நீங்கிய பின், வாகனங்களை மீண்டும் இயக்க வேண்டும் என, டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இதை, டிரைவர்களும் பின்பற்றுவதில்லை; வாகன உரிமையாளர்களும் அறிவுறுத்துவதில்லை.நேற்று கோர விபத்து நேர்ந்தபோது, நேரம், அதிகாலை, 3:30 மணி. உயிர்களைப் பலிவாங்கிய கன்டெய்னர் லாரி, கொச்சியில் இருந்து புறப்பட்டிருக்கிறது. பெங்களூருவுக்கு வேகமாகச் செல்லும் எண்ணத்தில், கன்டெய்னர் லாரி டிரைவர் ஹேமராஜ் ஓய்வின்றி இயக்கியுள்ளார்.விபத்துக்கு காரணமான டிரைவர் மீது, விபத்து என்று, சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

டிரைவர் மட்டுமல்லாது, கன்டெய்னர் லாரியின் உரிமையாளர் மீதும், வழக்கு பாய வேண்டும். அப்போது தான், எதிர்காலத்தில், இது போன்ற கோர விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024