Friday, February 21, 2020

விடைத்தாளில் ரூ.100 'ஐடியா' தந்த தலைமை ஆசிரியர் கைது

Updated : பிப் 21, 2020 01:48 | Added : பிப் 20, 2020 20:35

லக்னோ : உத்தர பிரதேசத்தில், 'விடைத்தாளுடன், 100 ரூபாய் வைத்து தந்தால், தேர்வில் வெற்றி பெறலாம்' என, மாணவர்களிடம் கூறிய பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, நேற்று முன்தினம் முதல், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அதற்கு முன், மாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர், பிரவீன் மால் என்பவர், மாணவர்கள், பெற்றோர் கூட்டத்தில் பேசியுள்ளார். மொபைல் போன்அதன் விபரம்:நம் பள்ளி மாணவர்கள் யாரும் தேர்வில் தோல்வி அடைய மாட்டார்கள் என்பதை சவாலாக கூறுகிறேன்.

தேர்வில் ஒருவருக்கொருவர், தொடாமல் பேசி, விடைகளை எழுதுங்கள். விடைத்தாளை திரும்பக் கொடுக்கும் போது, அதில், 100 ரூபாய் நோட்டை இணைத்து கொடுங்கள். உங்கள் விடைத்தாளை திருத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள், கண்ணை மூடிக் கொண்டு மதிப்பெண் போட்டு விடுவர். அவர்கள் அனைவரையும் எனக்கு தெரியும். நீங்கள் விடையை தவறாக எழுதினாலும், நான்கிற்கு, மூன்று மார்க் கொடுத்து விடுவர்;பயப்படாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 'அட இது நல்ல, 'ஐடியா' வாக உள்ளதே' என, மாணவர்கள் கிசுகிசுத்தாலும், சிலர், தலைமை ஆசிரியரின் பேச்சை, மொபைல் போனில் ரகசியமாக படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

ஒரு மாணவன், யோகி ஆதித்யநாத் அலுவலக வலைதளத்தில், குறை தீர்ப்பு பிரிவில், இந்த 'வீடியோ'வை பதிவேற்றினான். கண்காணிப்பு கேமராஅதை கண்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர் அலுவலக அதிகாரிகளின் உத்தரவின் படி, போலீசார், பிரவீன் மாலை கைது செய்தனர். உ.பி., அரசு, தேர்வு முறைகேடுகளை தடுக்க, 7,784 தேர்வு மையங்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்திஉள்ளது. தேர்வின் போது, அதிரடி சோதனை நடத்த, இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...