Tuesday, February 11, 2020


உலகிலேயே அதிவேகமாக பறந்து பிரிட்டிஷ் விமானம் சாதனை

Updated : பிப் 10, 2020 21:32 | Added : பிப் 10, 2020 21:29

லண்டன்: உலகிலேய அதிவேகமாக பறந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாதனை படைத்துள்ளது.



அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஜான் எப்., கென்னடி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு சொந்த போயிங் 747 விமானம் மணிக்கு 1290 கி.மீ., வேகத்தில் பறந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை, 5 ஆயிரத்து 600 கி.மீட்டர் தூரத்தை 4 மணி 56 நிமிடங்களில் அடைந்தது. இதற்கு அடுத்தபடியாக விர்ஜின் அட்லாண்டிக் ஏர்பஸ் விமானம் ஒன்று ஒரு நிமிடம் தாமதமாக லண்டன் விமான நிலையத்தை அடைந்தது.

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளை தற்போது கடும் புயல் ஒன்று மிரட்டி வருகிறது. இப்புயலின் பிடியிலிருந்து தப்பிக்கவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் லண்டனுக்கு அதி வேகமாக விமானத்தை இயக்கி உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன் சாதனையாக நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு 5 மணி 13 நிமிடங்களில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024