Tuesday, February 11, 2020

தூக்கு தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Added : பிப் 11, 2020 03:15 |

புதுடில்லி : குற்றவாளிகளுக்கு துாக்கு மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி பரமேஸ்வரன் நம்பூதிரி, 88, உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:நம் நாட்டில், கொடிய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இவர்களது கழுத்தில் துாக்கு கயிறை மாட்டி, தண்டனை நிறைவேற்றப்படுகிறது; இது, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடைமுறைக்கு வந்த தண்டனை; நாடு சுதந்திரம் அடைந்த பின்னும், துாக்கு கயிறு மூலம், மரண தண்டனையை நிறைவேற்றுவது முறையல்ல.மேலும், இந்த தண்டனை, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராக உள்ளது. எனவே, மரண தண்டனையை துாக்கு தண்டனை மூலம் நிறைவேற்றும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...