Tuesday, February 11, 2020

குஜராத் ஆயுர்வேத பல்கலை.,க்கு தேசிய முக்கியத்துவ அந்தஸ்து

Added : பிப் 11, 2020 00:59

புதுடில்லி : லோக்சபாவில் நேற்று, குஜராத் ஆயுர்வேத பல்கலை.,க்கு, தேசிய முக்கியத்துவ அந்தஸ்து அளிக்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜாம் நகரில், குஜராத் ஆயுர்வேத பல்கலைகழகம் உள்ளது. இந்த பல்கலை., வளாகத்தில் ஆயுர்வேதம் தொடர்பான ஆய்வு, மருந்து, மருத்துவம், முதுகலை கல்வி உள்ளிட்டவற்றுக்கான மூன்று கல்வி மையங்கள் இடம்பெற உள்ளன.இதையடுத்து, ஆயுர்வேதப் பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய, கல்வி மற்றும் ஆய்வு மையமாக, குஜராத் ஆயுர்வேத பல்கலை., செயல்பட உள்ளது. இதற்கு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி மையம் என்ற சிறப்பை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதையொட்டி, ஆயுர்வேத கல்வி மற்றும் ஆய்வு மைய மசோதா, நேற்று, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தாக்கல் செய்த இந்த மசோதாவுக்கு, காங்., எம்.பி., சசி தரூர், திரிணமுல் காங்., எம்.பி., சவுகதா ராய் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் மாநிலங்களில், ஆயுர்வேத மையம் அமைக்காதது ஏன் என, அவர்கள் கேள்வி எழுப்பினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024