வேளாண் பல்கலை முதலாமாண்டு வகுப்பு ஆக.13ல் துவக்கம்
கோவை: தமிழ்நாடு வேளாண்
பல்கலைக்கழகத்தில் 14 உறுப்பு மற்றும் 26 இணைப்பு கல்லூரி என மொத்தம் 40
கல்லூரிகள் மூலம் 12 இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இதில்
3,422 இடங்கள் உள்ளன. இதற்கான, முதல்கட்ட ஆன்லைன் கவுன்சலிங் கடந்த மாதம்
நடந்து முடிந்தது. மீதமுள்ள இடங்களை நிரப்ப 2ம் கட்ட ஆன்லைன் கவுன்சலிங்
கடந்த 1ம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. வரும் 13ம் தேதி முதல்
இளங்கலை மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் துவங்கும் என வேளாண்
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment