Monday, August 13, 2018


கேரளா :பாஸ்போர்ட்டை இலவசமாக மாற்றி தர சுஷ்மா உத்தரவு

Added : ஆக 13, 2018 03:05 |



புதுடில்லி: கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து திறந்து விடப்பட்டது. இதனையடுத்து ஏராளமான நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:




Sushma Swaraj
✔@SushmaSwaraj



There are unprecedented floods in Kerala causing huge damage. We have decided that as the situation becomes normal, passports damaged on account floods shall be replaced free of charge. Please contact the concerned Passport Kendras. #KeralaFloods Pls RT
5:52 PM - Aug 12, 2018
10.1K
3,262 people are talking about this
Twitter Ads info and privacy

சேதமடைந்த அல்லது இழந்த பாஸ்போர்ட்டுகளுக்குப் பதிலாக வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் கேரளாவில் ,பாஸ்போர்ட்டுகள் வெள்ளம் அல்லது மழைக்காலத்தில் சேதமடைந்திருந்தால் இலவசமாக மாற்றித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad  Amisha.Rajani@timesofindia.com 22.09.2024  Hyder...