Monday, August 13, 2018

கனமழை அறிவிப்பால் அச்சத்தில் மூணாறு மக்கள்

Added : ஆக 13, 2018 00:55

மூணாறு: மூணாறில் கடந்த மூன்று நாட்களாக மழை குறைவாக இருந்தாலும்,கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.கேரளாவில் தென்மேற்கு பருவமழை மற்ற பகுதிகளைக்காட்டிலும், மூணாறில் அதிகம் பெய்யும். இந்தாண்டு பருவமழை மே 29ல் துவங்கி ஒரு வாரம் பெய்தது. அதன்பிறகு அவ்வப்போது கன மழை பெய்த நிலையில், இம்மாத துவக்கத்தில் மழை குறைந்து வெயில் முகம் காட்டியது.இந்நிலையில் ஆக.6 முதல் மழை தீவிரமடைந்து ஆக.9ல், 34.64 செ.மீ., பெய்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டு,போக்குவரத்து பாதிக்கப்பட்டது .அதன்பின் மழை வெகுவாக குறைந்தது. ஆக.10ல் 7.04, 11ல் 8.10, நேற்று காலை 8:30மணிப்படி 6.34 செ.மீ., என பதிவானது. எனினும் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். -----

No comments:

Post a Comment

NEWS TODAY 13.11.2024