Friday, January 4, 2019

புது இன்ஜி., கல்லூரிக்கு இனி அனுமதி இல்லை

Added : ஜன 04, 2019 02:08 



சென்னை : 'புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவக்க, அடுத்த ஆண்டு முதல், அனுமதி அளிக்க வேண்டாம்' என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது.

உயர் கல்வியின் தரம் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளின் நிலை குறித்து ஆராய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஐதராபாத் ஐ.ஐ.டி.,யின் தலைவர், மோகன் ரெட்டி தலைமையிலான இந்தக் குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சகஸ்ரபுதே கூறியதாவது: பெரும்பாலான இன்ஜி., கல்லுாரிகளில், இடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக கல்லுாரிகள் உள்ளன. எனவே, அடுத்த ஆண்டு முதல், புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

வழக்கமான மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பாடங்களுக்கு, மாணவர் இடங்களை அதிகரிக்க வேண்டாம். மாறாக நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, முப்பரிமாண தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றுக்கு, புதிய பாடங்களை அனுமதிக்கலாம் என்றும், குழு பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024