கொடிகட்டி பறக்கும் இரிடியம் மோசடி கோடிக் கணக்கில் புரளும் பணம்
Added : ஜன 04, 2019 04:19
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொடி கட்டி பறக்கும் இரிடியம் மோசடியால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். இதில் கோடிக் கணக்கில் பணம் புழக்கத்தில் உள்ளது.
கனிமத்தில் அதிக அடர்த்தி கொண்டது பிளாட்டினம். இதற்கு முந்தைய நிலையில் இருப்பது இரிடியம். 2,000 டிகிரி செல்சியசில் கூட உருகாத இக்கனிமம் கிடைப்பது அரிது. செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ராக்கெட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
அருப்புக்கோட்டையில் இரிடியம் என்ற பெயரில் கும்பல் ஒன்று கோடிக் கணக்கில் மோசடி செய்து வருகிறது. கோயில் கோபுர கலசத்தில் இடி விழுவதால் இரிடியமாக மாறி நல்ல விலை கிடைப்பதாக ஏமாற்றி வருகின்றனர்.மேலும், 'ராணுவம் மற்றும் ராக்கெட் பாகங்களுக்கு இரிடியம் பயன்படுத்தப்படுகிறது. அதிக விலை கொடுத்து மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. இதற்காக பொதுமக்களிடம் பணம் திரட்ட எங்களை முகவராக நியமித்துள்ளனர். ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மத்திய அரசு மூன்று மடங்கு திருப்பி கொடுக்கும்' என மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது.
இங்குள்ள திருச்சுழி ரோட்டில் செயல்பட்ட மோசடி நிறுவனம் தற்போது மதுரை ரோட்டில் உள்ளது. வாரம் ஒரு முறை கூட்டம் நடத்தி இரிடியம் குறித்து விளக்கும் இக்கும்பல், மூன்று ஆண்டாக ஏமாற்றி வருகிறது. கொடுத்த பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டுமே என்ற அச்சத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் கொடுக்க தயங்குகின்றனர்.
No comments:
Post a Comment