Friday, January 4, 2019

பொங்கல் பரிசு தொகுப்பு ஆதார் கார்டில் வாங்கலாம்

Added : ஜன 04, 2019 01:36

ரேஷன் கார்டை தொலைத்தவர்கள், ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த மொபைல் போனை பயன்படுத்தி, ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வாங்கலாம்.

தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலை உணவு பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். ரேஷன் கார்டை, கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'ஸ்கேன்' செய்து, ஊழியர்கள் பொருட்களை வழங்குவர்.தமிழக அரசு, பொங்கலுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய, பரிசு தொகுப்பை வழங்க உள்ளது. இவை, ரேஷன் கார்டை தொலைத்தவர்களுக்கு, ஆதார் கார்டின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆதார் கார்டு அடிப்படையில் தான், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த கார்டை தொலைத்தவர்களுக்கு, மாற்று கார்டு வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. சில இடங்களில், புதிதாக வழங்கப்படும் 

ரேஷன் கார்டுகளும், கடைகளில், 'ஸ்கேன்' ஆகவில்லை என, புகார்கள் வருகின்றன.இதனால், கார்டை தொலைத்தவர்கள், ஸ்கேன் ஆகாத கார்டு வைத்திருப்போர், ரேஷன் கார்டில் ஒரு உறுப்பினரின், ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த மொபைல் போன் எண்ணுடன், ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.அங்கு, ஊழியர்கள், ஆதார் எண்ணை ஸ்கேன் செய்து, பொங்கல் பரிசு வழங்குவர். இல்லையேல், கருவியில், மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, அதற்கு வரும், 'ஒன் டைம் பாஸ்வேர்டு' அடிப்படையில், பரிசு தொகுப்பு வழங்கப்படும். விரைவில், மாற்று ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஊழியர்கள் எதிர்ப்பு

ஒரு ரேஷன் கடையில், 1,000 கார்டுகள் இருந்தால், 500 - 600 கார்டுகளுக்கு தான், முழு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இந்த அளவில் தான், பொங்கல் பரிசும் வழங்கப்படுகிறது. இதனால், பொருட்கள் வாங்காதோரின் கார்டை பயன்படுத்தி, வழங்கியது போல முறைகேடு நடக்கிறது; இதற்கு, அதிகாரிகளும் உடந்தை.தமிழக அரசு அறிவித்துள்ள, பொங்கல் பரிசு, 1,000 ரூபாய்,ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. ஊழியர்கள் பற்றாகுறை,கூடுதல் பணிச்சுமை, பாதுகாப்பு இல்லாதது, வீண் குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களால், 1,000 ரூபாய் ரொக்கத்தை, ரேஷனில் வழங்க, ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024