Friday, January 4, 2019


பார்சல் சாப்பாடு விலை ரூ.20 உயர்வு

Added : ஜன 04, 2019 01:25

ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால், ஓட்டல்களில், பார்சல் சாப்பாட்டின் விலை, 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு, விற்பனை மற்றும் உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, ஜன., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்டு வந்த, பிளாஸ்டிக் கவர்கள், பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதனால், மாற்று வகை டப்பாக்களை பயன்படுத்தி, பார்சல் செய்யப்படுவதால், ஓட்டல்களில் சாப்பாட்டின் விலை, 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர், வெங்கடசுப்பு கூறியதாவது:பிளாஸ்டிக் தடையால், தடையில்லாத, மறுமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் டப்பாக்களின் விலை, 2 ரூபாய்க்கு மேல் உள்ளது. 

சாப்பாடு பார்சலின் போது, கூட்டு, பொரியல், குழம்பு என, எட்டுக்கும் மேற்பட்ட பாக்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.துணி பையும் தர வேண்டியுள்ளது. எனவே, ஒரு சாப்பாடு பார்சல் செய்ய, 30 ரூபாய் வரை செலவாகிறது. இதில், 10 ரூபாயை குறைத்து, 20 ரூபாயை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கிறோம்.இதுபோல, டிபன் வகைகளுக்கும், டப்பாக்களை பொறுத்து, 10 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் பார்சல் சாப்பாடு, டிபன் விற்பனை குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024