Friday, January 4, 2019

ரயிலில் காலியாக உள்ள இருக்கைகளை அறியும் வசதி

Added : ஜன 04, 2019 02:37

புதுடில்லி:ரயில்களில், 'ஆன்லைனில்' டிக்கெட் பதிவு செய்யும்போது, காலியாக உள்ள, படுக்கை மற்றும் இருக்கைகளை பார்க்கும் வகையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்படி, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

சமீபகாலமாக, ரயில் சேவைகள் மேம்படுத்தப்பட்டு, பயணியருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.பயணத்தின் போது, பயணியரின் தேவைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, காலியாக உள்ள, படுக்கை அல்லது இருக்கைகள் குறித்த விபரங்களை பயணியர் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்ற விபரத்தை தெரிந்து கொள்ளலாமே தவிர, கீழ் படுக்கை, மேல் படுக்கை போன்ற, எந்தெந்த படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை அறிய முடியாது. இதனால், மூத்த குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இதையடுத்து, ரயில்களில் காலியாக உள்ள படுக்கை அல்லது இருக்கை வசதிகளை, ஆன்லைன் மற்றும் 'மொபைல் ஆப்'பில் பார்க்கும் வகையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, சினிமா தியேட்டர், தொலை துார பஸ் மற்றும் விமானங்களில், காலி இருக்கைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்றபடி, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.அதுபோன்ற நடைமுறையை ரயில்வேயிலும் ஏற்படுத்த, திட்ட மிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024