Friday, May 24, 2019

11 மணி நேரம் காத்திருந்து சோகத்துடன் வெளியேறிய பொன்.ராதாகிருஷ்ணன்!

சிந்து ஆர்


ரா.ராம்குமார் 


வாக்கு எண்ணும் மையத்தில் சுமார் 11.45 மணி நேரம் வரை தனிமையில் அமர்ந்திருந்த பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.



கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வாக்கு எண்ணிக்கைக்காக இன்று காலை 8.30 மணியளவில் வந்தார். முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் முன்னிலையில் இருந்ததால், தனியாக ஒரு கொட்டகையில் அமர்ந்திருந்தார். தனது மொபைல் போனில் தேர்தல் சம்பந்தமான செய்திகளைப் பார்த்துக்கொண்டே இருந்தார். காலையில் அமர்ந்தவர் இரவு 8.15 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.



அப்போது செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ``வேண்டாம்" என கூறிவிட்டு சோகத்துடன் வெளியேறினார். பொன்.ராதாகிருஷ்ணன் தனியாக இருந்த சமயத்தில் சில செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, முடியும்போது பார்க்கலாம் என்றார். சுமார் 11.45 மணி நேரம் வாக்கு எண்ணும் மையத்தில் அமர்ந்திருந்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்காமலே தொண்டர்கள் புடைசூழ புறப்பட்டுச் சென்றார்.

No comments:

Post a Comment

Can BCI halt enrolment of an entire graduating batch?

Can BCI halt enrolment of an entire graduating batch? Manan Kumar Mishra Rizmi Lia M. Chennai. 15.08.2026 On Thursday, Bar Council of India ...