Thursday, July 18, 2019


இதே நாளில் அன்று

Added : ஜூலை 17, 2019 21:48





ஜூலை 18, 2013 கவிஞர் வாலி:

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே, திருப்பராய்துறையில், ஸ்ரீனிவாசன் ஐயங்கார் -- பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாக, ௧௯௩௧ அக்., ௨௯ல் பிறந்தார். ஓவியராக வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னை வந்த அவர், மலைக்கள்ளன் படம் மூலம், பாடலாசிரியராக அறிமுகமானார். 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் போன்ற படங்கள், 'கையளவு மனசு' என்ற, 'டிவி' தொடரிலும் நடித்துள்ளார்.கடந்த, 1973-ல், பாரத விலாஸ் படத்தில், 'இந்திய நாடு என் வீடு' என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். ஐந்து முறை, மாநில அரசின் விருது, 2007ல், பத்மஸ்ரீ விருதும் பெற்றார். இவர் எழுதிய, 'பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம்' ஆகிய கவிதை தொகுப்புகள், புகழ் பெற்றவை. 2013 ஜூலை, 18 ல் காலமானார்.அவர் இறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment

HC orders govt to issue recognition to nursing colleges

HC orders govt to issue recognition to nursing colleges  16.11.2024 TIMES OF INDIA BHOPAL. Bhopal/Jabalpur : A division bench of MP high cou...