Wednesday, July 17, 2019


பிறப்பு, இறப்பு தாமத பதிவு கட்டணம் ஆண்டுக்கு ரூ.500 ஆக உயர்வு

Added : ஜூலை 16, 2019 23:17

சிவகங்கை : ''பிறப்பு, இறப்பை தாமதமாக பதிவு செய்தால் தாமத பதிவு கட்டணம் ஆண்டுக்கு ரூ.500 என உயர்த்தப்பட்டுள்ளதாக'' சிவகங்கை சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது : பிறப்பு, இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., அல்லது சுகாதார ஆய்வாளரிடம் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு பதிவு செய்ய தாமத பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.பிறப்பு, இறப்பு நிகழ்ந்து 21 நாட்களுக்கு பின் பதிவு செய்தால், தாமத பதிவு கட்டணம் 2 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும், ஒரு மாதத்திற்கு மேல் தாமத பதிவு கட்டணம் 5 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும், ஒரு ஆண்டிற்கு மேல் தாமத பதிவு கட்டணம் 10 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தையின் பெயரை ஒரு ஆண்டிற்குள் இலவசமாக பதியலாம். அதற்கு மேல் பதிவு செய்ய தாமத கட்டணமாக 200 ரூபாய் செலுத்த வேண்டும். சரியான பிறப்பு, இறப்பு தேதியை குறிப்பிட்டால் சான்றுக்கான தேடுதல் கட்டணம் கட்ட தேவையில்லை. சரியாக குறிப்பிடாத பட்சத்தில் பிறப்பு, இறப்பு தேதியினை தேட கட்டணம் ஆண்டுக்கு 100 ரூபாய் கட்ட வேண்டும். 2019 மார்ச் 4 ம் தேதி முதல் பிறப்பு, இறப்பு சான்றினை ஆன்லைனில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
பரிட்சார்த்தமாக 2018 மற்றும் 2019 ல் பதிவு செய்த பிறப்பு, இறப்பு சான்றுகளை ''crstn.org'' என்ற வெப்சைட்டில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே கூடுதல் பதிவு கட்டணத்தை தவிர்க்க பிறப்பு, இறப்பு நடந்த உடன் அவற்றை உரிய அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும், என்றார்.




No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...