Thursday, July 4, 2019

இந்தியாவில் முகநூல் சேவை திடீர் பாதிப்பு 

By DIN | Published on : 04th July 2019 02:50 AM |

இந்தியாவில் பிரபல சமூகவலைதளங்களான முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாக்ராம் ஆகியவற்றின் சேவைகள் புதன்கிழமை திடீரென பாதிக்கப்பட்டன.

இதேபோல், மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, தென் அமெரிக்க நாடுகள், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் மேற்கண்ட 3 சமூகவலைதளங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து முகநூல் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்களது செயலிகள் மூலம் படங்களை பதிவேற்றம் செய்தல், விடியோக்களை அனுப்புதல், பிற கோப்புகளை அனுப்புதல் ஆகிய சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதை கூடிய விரைவில் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024