Thursday, July 18, 2019



தேசிய மருத்துவ கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

dinamalar 18.07.2019

நாட்டின் மருத்துவ கல்வியை சீரமைப்பதற் காக, தேசிய மருத்துவ கமிஷனை அமைக்க, பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய மசோதாவுக்கு, கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின், பத்திரிகை யாளர்களை சந்தித்த, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: தேசிய மருத்துவ கமிஷனை ஏற்படுத்த, மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. மருத்துவ கல்வியை சீரமைப்பதற்கான இந்த நடவடிக்கை, தற்போது செயல்பாட்டில் உள்ள, இந்திய மருத்துவ கவுன்சிலை மாற்றி அமைக்கும்.

இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவில், பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர், இறுதி ஆண்டில், 'நேஷனல் எக்சிட் டெஸ்ட்' எனப்படும், 'நெக்ஸ்ட்' தேர்வு எழுத வேண்டும்.அது, இரு வித குறிக்கோள் களை கொண்டுள்ளது. ஒன்று, இதில் வெற்றி பெறுபவர்கள் தான், இந்தியாவில் டாக்டராக பணியாற்ற முடியும்.இரண்டாவது, இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்களே, முதுகலை மருத்துவம் படிப்பதற்கான தகுதியாக கருதப்படும்.

மேலும், வௌிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கும், இந்த தேர்வு, சோதனை தேர்வாக இருக்கும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவில் மருத்துவ சேவை புரிய, தனியாக தேர்வு எழுத தேவையில்லை. அதே நேரத்தில், 'நீட்' தேர்வு, பொதுவான கவுன்சிலிங் மற்றும் 'நெக்ஸ்ட்' தேர்வு மூலம் தான், 'எய்ம்ஸ்' மருத்துவமனை யில் படிக்க முடியும்.இவ்வாறு, பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024