வேளாங்கண்ணி ரயில் நீட்டிப்பு
Added : செப் 17, 2019 00:46
விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் வழியாக இயங்கும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ், நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து, சனிக்கிழமைதோறும், காலை, 11:00 மணிக்கு புறப்பட்டு கொல்லம், செங்கோட்டை, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர் வழியாக, வேளாங்கண்ணிக்கு, மறுநாள் காலை, 7:00 மணிக்கு, ரயில் சென்றடையும்.மறுமார்க்கத்தில், ஞாயிறுதோறும் மாலை, 6:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 2:00 மணிக்கு, எர்ணாகுளம் சென்றடையும் விதத்திலும், வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயங்குகிறது.'செப்டம்பர் வரை இயங்கும்' என அறிவிக்கப்பட்ட, இந்த ரயில் அக்டோபர், நவம்பர் என, மேலும் இரு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment