Saturday, September 21, 2019

சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : செப் 20, 2019 22:52

சென்னை, -சவுதி அரேபியாவில், முன்னணி மருத்துவமனையில் பணிபுரிய, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சவுதி அரேபியா நாட்டில், ஜுபைல் என்ற இடத்தில் உள்ள, முன்னணி மருத்துவமனைக்கு, 35 வயதிற்கு உட்பட்ட, 'டிப்ளமா' அல்லது பி.எஸ்சி., படித்த, ஆண் செவிலியர்கள்; 40 வயதிற்கு உட்பட்ட, இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ள, பி.எஸ்சி., படித்த, பிசியோதெரபிஸ்ட் என்ற இயன்முறை மருத்துவர்கள், பெருமளவில் தேவைப்படுகின்றனர்.மேலும், ஆண், பெண் மருத்துவர்கள்; பெண், 'லேப் டெக்னிஷியன், எக்ஸ்ரே டெக்னிஷியன்' தேவைப்படுகின்றனர். விருப்பம் உள்ளவர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின், ovemclsn@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.ஊதியம் மற்றும் பணி விபரங்களை, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின், www.omcmanpower.com என்ற, இணையதளத்தில் பார்க்கலாம்

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...