பாகீரதி, வயது 105 ; 4ம் வகுப்பு, 'பாஸ்'
Added : பிப் 05, 2020 22:44
திருவனந்தபுரம் : கேரளா, கொல்லத்தை சேர்ந்த, ௧௦௫ வயது பாட்டி, நான்காம் வகுப்பு தேர்வினை எழுதி, அதில் தேர்ச்சி பெற்றுள்ளதால், இந்தியாவின் மூத்த மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த, 105 வயது பாகீரதி அம்மாள், நான்காம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மாநில கல்வியறிவு திட்டத்தில், பாகீரதி அம்மாள், கடந்த ஆண்டு கொல்லத்தில் தேர்வு எழுதினார். அதன் முடிவுகள், நேற்று வெளியானதில், அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.பாகீரதி பாட்டிக்கு, இளம் வயதில், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது.
ஆனால், சிறு வயதில் அவரது தாய் இறந்ததால், சகோதரர்களை கவனிக்கும் நிலை ஏற்பட்டது.அடுத்து, 30 வயதில் பாகீரதியின் கணவர் இறந்ததால், ஆறு குழந்தைகளை வளர்க்க வேண்டிய நிலை உருவானது. இந்நிலையில், 105 வயதில், நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நாட்டின் மூத்த மாணவியாகி உள்ளார்.முதுமை காரணமாக பாகீரதி அம்மாள் கூடுதல் நேரம் தேர்வு எழுதியுள்ளார். இதில்,275க்கு,205 மார்க் எடுத்துள்ளார்.
ஒன்பது வயதில், மூன்றாம் வகுப்புக்கு மேல் கல்வியை தொடர முடியாத பாகீரதி அம்மாள், 105 வயதில் தேர்வு எழுதி, 4ம் வகுப்பு, 'பாஸ்' செய்துள்ளார். இதனால், பாகீரதி அம்மாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அடுத்து, 10 ம் வகுப்பு தேர்வு எழுதவிருப்பதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment