டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்களின் சொத்து பட்டியல் கணக்கெடுப்பு
Added : பிப் 05, 2020 23:56
சென்னை: தேர்வு முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களின் சொத்து கணக்கை திரட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அரசு பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. என்ற அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வழியாக போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் 'குரூப் - 4' தேர்வில் நடந்த முறைகேடுகள் அனைத்து துறைகளிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
குரூப் - 4 தேர்வு மோசடியில் போலீசார் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இடைத்தரகர்கள் என பல்வேறு தரப்பினர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதே போல் அனைத்து மோசடிகளுக்கும் உடந்தையாக சில டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் செயல்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
இதனால் டி.என்.பி.எஸ்.சி. மீதான நம்பகத்தன்மை இளம் தலைமுறையிடம் குறைந்து விட்டது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி மட்டுமின்றி லட்சக்கணக்கில் பணமும் தேவை என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு முறைகேடுகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக இருந்துள்ளதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையிலும் இது தெரிய வந்துள்ளது.
எனவே டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் வருமானம் மற்றும் சொத்துக் கணக்கை சேகரிக்க டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரிகளும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் திட்டமிட்டுள்ளனர். இந்த பணிகளை துவங்க அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.இப்பணி துவங்கினால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழியர்கள் பினாமிகள் பெயரில் சொத்து குவித்த பலர் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment