Tuesday, February 4, 2020

`அரசுக் கல்லூரிதான், ஆனா ஆண்டுக் கட்டணம் 5.17 லட்ச ரூபாய்! - அதிர்ச்சி கொடுத்த ஈரோடு ஐ.ஆர்.டி

நவீன் இளங்கோவன்க .தனசேகரன்

தனியாருக்கு நிகராக அரசு மருத்துவக் கல்லூரியில் வருடத்துக்கு 5 லட்சத்துக்கும் மேல் கட்டணம் வசூல் செய்வதாகப் புகார் எழுந்திருக்கிறது.

பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், ஐ.ஆர்.டி (institute of road and technology) எனப்படும் சாலை போக்குவரத்து நிறுவனத்தினால் 1984-ல் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 100 எம்.பி.பி.எஸ் இடங்களில் மாநிலங்களுக்கு 55 இடங்களும் மத்திய அளவில் 15 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 30 இடங்களையும், இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 33 ஆண்டுகாலமாக சாலைப் போக்குவரத்துக்கழக நிறுவனத்தின்கீழ் இயங்கி வந்த இந்த மருத்துவக் கல்லூரி, 2018 அக்டோபரில் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரியாக மாறிய பின்பும், தனியார் மருத்துவக் கல்லூரிக்கு நிகராக எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 5 லட்சத்துக்கு மேல் கட்டணம் வசூலிப்பதாகப் பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாணவர் ஒருவரின் பெற்றோர், ``பெருந்துறை ஐ.ஆர்.டி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்குக் கல்விக்கட்டணம் ரூ.3.85 லட்சம், விடுதிக் கட்டணம் ரூ.81 ஆயிரம், கல்லூரிக் கட்டணம் ரூ.33 ஆயிரம், நோட்டுப் புத்தகம் மற்றும் மருத்துவக் கல்வி சாதனங்களுக்கு ரூ.18 ஆயிரம் என ஆண்டு ஒன்றுக்கு மொத்தம் ரூ.5.17 லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு ஒன்றுக்கு வெறும் ரூ.13,600 மட்டுமே வசூலிக்கின்றனர்.

ஐ.ஆர்.டி நிறுவனத்திடமிருந்து தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு இந்தக் கல்லூரியை ஒப்படைக்கும்போது ‘ஹைபிரிட் மாடல்’ என்ற வார்த்தையை அரசாணையில் குறிப்பிட்டுள்ளனர்.கல்லூரி முதல்வர் டாக்டர்.செந்தில்குமார்

அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்த பின்னரும், தனியாருக்கு நிகராக கட்டணத்தை வசூலிப்பதில் கொஞ்சமும் நியாயமில்லை. இதுசம்பந்தமாக அரசின் கவனத்துக்குப் பலமுறை மனுக்களை அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு போக்குவரத்து தொழிலாளியால் வருடத்துக்கு 5 லட்சம் பணம் கொடுத்து குழந்தைகளை மருத்துவம் படிக்க வைக்க முடியுமா.. இந்த விவகாரத்தில் நீதி கேட்டு நீதிமன்றத்தையும் நாட இருக்கிறோம்” என்றனர் கொதிப்புடன்.

இந்த விவகாரம் குறித்து பெருந்துறை அரசு ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.செந்தில்குமாரிடம் பேசினோம். ``ஐ.ஆர்.டி நிறுவனத்திடமிருந்து தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு இந்தக் கல்லூரியை ஒப்படைக்கும்போது ‘ஹைபிரிட் மாடல்’ என்ற வார்த்தையை அரசாணையில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ, அது தொடரும் எனக் கூறியுள்ளனர். இது அரசினுடைய கொள்கை முடிவு.

பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி

இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அரசிடம் உங்கள் கோரிக்கைகளை வையுங்கள் எனப் பெற்றோர்களிடம் கூறியிருக்கிறோம். எங்கள் தரப்பில் இருந்தும் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு இந்த விவகாரம் தொடர்பாகத் தகவல் அளித்திருக்கிறோம். அரசு என்ன உத்தரவு கொடுத்தாலும், அதைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்” என்றார் உறுதியான குரலில்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...