அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வை உருதுவிலும் நடத்த உத்தரவு
பதிவு செய்த நாள் 13 ஏப் 2017 22:11
புதுடில்லி: 'மருத்துவக் கல்விக்காக நடத்தப்படும், 'நீட்' எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வை, அடுத்த ஆண்டு முதல், உருது மொழியிலும் நடத்த வேண்டும்' என,சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
மருத்துவக் கல்விக்காக, 'நீட்' எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் உட்பட, 10 மொழிகளில், இந்த நுழைவுத் தேர்வை எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, மே, 7ல் நடக்க உள்ளது. இந்த நிலையில், 'உருது மொழியிலும் நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தன கவுடர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. 'வரும், 2018 - 19ம் கல்வியாண்டு முதல், நீட் நுழைவுத் தேர்வை, உருது மொழியிலும் நடத்திட வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை தொடர்ந்தோர், இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும் என,வலியுறுத்தினர்.
ஆனால், அதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், 'அதற்கு போதிய கால அவகாசம் இல்லை. உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது; அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்' என, கூறியுள்ளது.

No comments:
Post a Comment