பெண் சம்பாதித்தாலும் ஜீவனாம்சம் தரணும்': டில்லி கோர்ட்
பதிவு செய்த நாள் 15 ஏப் 2017 04:13
புதுடில்லி : 'சம்பாதிக்கும் திறன் இருப்பதால், விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுக்க முடியாது' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது.
டில்லியைச் சேர்ந்த பெண், மாஜிஸ்திரேட் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், டில்லி செஷன்ஸ் கோர்ட் அளித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: இந்த வழக்கை தொடர்ந்துள்ள பெண், பட்டதாரி. அவர் நினைத்தால், தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியும் என, கணவன் கூறியுள்ளதை ஏற்க முடியாது. ஒரு பெண், வேலைக்கு சென்று சம்பாதிக்கும் திறன் பெற்றிருந்தாலும், அதை காரணம் காட்டி, ஜீவனாம்சம், இழப்பீடு தர முடியாது என கூற முடியாது. இவ்வாறு கோர்ட் கூறி உள்ளது.
No comments:
Post a Comment