Saturday, April 22, 2017

நேர்மையான அதிகாரிகளுக்கு அரசின் ஆதரவு கூடுதலாக உண்டு’ மோடி பேச்சு

‘நேர்மையான அதிகாரிகளுக்கு அரசின் ஆதரவு கூடுதலாக உண்டு’ மோடி பேச்சு
ஏப்ரல் 22, 05:30 AM

புதுடெல்லி,

நேர்மையான அதிகாரிகளுக்கு அரசின் ஆதரவு கூடுதலாக உண்டு என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி கூறினார்.குடிமைப்பணிகள் தினம்

சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய குடிமைப்பணி அதிகாரிகள் (ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்) அணியின் மத்தியில், முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல் உரை ஆற்றிய தினம் (1947, ஏப்ரல் 21–ந் தேதி), குடிமைப்பணிகள் தினமாக 2006–ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் 11–வது குடிமைப்பணிகள் தினம் டெல்லியில் நேற்று நடந்தது. சாதனை படைத்த குடிமைப்பணி அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருதுகளை வழங்கி பேசினார்.கூடுதல் ஆதரவு

அப்போது அவர் கூறியதாவது:–

இந்த நாள், மறு அர்ப்பணிப்பு நாள். குடிமைப்பணி அதிகாரிகள் தங்கள் பலம், திறமைகள், சவால்கள், பொறுப்புகள் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள்.

இப்போது நிலவுகிற சூழல்கள், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல்களில் இருந்து மாறுபட்டதாகும். இனி வரும் ஆண்டுகளில் இந்தச் சூழல்கள் இன்னும் மாற்றம் பெறும்

நேர்மையான, உண்மையான ஈடுபாடுள்ள குடிமைப்பணி அதிகாரிகளுக்கு எனது நிர்வாகம் கூடுதல் ஆதரவு தர விருப்பம் கொண்டுள்ளது. இது அதிகார வர்க்கத்துக்கான நேரம்.விரைவான முடிவு

நீங்கள் விரைவான முடிவுகளை எடுக்கலாம். அரசு அதிகாரிகள் மீதான பொறுப்புகள் அதிகரித்துள்ளது. இது வேலைகளில் மட்டுமல்ல, சவால்களிலும்தான்.

அரசியல் தலைமை சீர்திருத்தங்களை கொண்டு வரலாம். ஆனால் அதிகார வர்க்கம்தான் செயல்படுத்த வேண்டும். அதில் பொதுமக்களின் பங்களிப்பு மாற்றத்தை கொண்டு வரும். எல்லோரையும் ஒரே அலைவரிசையில் கொண்டு வர இருக்கிறோம். அதன் பின்னர் நாம் நல்ல பலன்களை அடைய முடியும்.நான் உங்களுடன் இருக்கிறேன்

அதிகாரிகள் சரியான முடிவுகளை எடுக்கிறபோது, அதனால் பாதிப்பு வருமோ என நினைக்க தேவையில்லை. நேர்மையான நோக்கத்துடனும், உண்மையுடனும், மக்கள் நலனுக்காக ஒரு முடிவு எடுத்தால், உங்களை நோக்கி இந்த உலகின் எந்தவொரு சக்தியாலும் விரல்களை உயர்த்த முடியாது.

என்ன நடந்தாலும், நான் உங்களுடன் இருக்கிறேன்.2022–ம் ஆண்டுக்குள்...

நீங்கள் வேலை செய்கிற பாணியையும், சிந்திக்கும் பாங்கையும் மாற்றிக்கொண்டால் நல்லது.

மூத்த அதிகாரிகள் நமக்கு எல்லாம் தெரியும் என்ற உணர்வில் இருந்து கொஞ்சம் விலகி இருங்கள். இளைய அதிகாரிகளின் யோசனைகளை கேட்டு செய்யுங்கள். அதிகாரிகள் ஏதோ பள்ளத்தில் இருந்து வேலை செய்வது போல தனிமையில் செய்ய வேண்டாம். அனைவரும் ஓரணியாக செயல்படுங்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகள்படி இந்தியாவை 2022–ம் ஆண்டுக்குள் உருவாக்குவதற்கு குடிமைப்பணி அதிகாரிகள் சூளுரை எடுத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024