திருமணமான 9 நாளிலேயே கணவரை கொலை செய்த புதுப்பெண் கைது; பரபரப்பு வாக்குமூலம்
திருமணம் ஆன 9 நாட்களிலேயே கணவரின் தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்த புதுப்பெண் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏப்ரல் 12, 02:56 AM பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 28), சிற்ப கலைஞர். இவருக்கும் கடலூரை சேர்ந்த 17½ வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 2-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் அவரது தாய் வீட்டில் தாலி பிரித்துக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரமேஷ் மற்றும் இருவீட்டாரின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கிருந்து புதுமண தம்பதி ரமேஷின் தாய் வீட்டிற்கு வந்தனர். ரமேஷின் தாய் ராணி ரேஷன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். கணவன்-மனைவி இருவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது வீட்டில் தலைநசுங்கிய நிலையில் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீசார் விசாரணை
சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய ராணி, தனது மகன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுந்தார். ரமேஷின் மனைவியும், யாரோ கொலை செய்துவிட்டதாக கூறி கணவரின் பிணத்தை பார்த்து கதறி அழுதார். இந்த கொலை தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இருந்த ரமேஷின் மனைவி மீது போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறினார். இதனால் சந்தேகம் வலுத்து, அவரிடம் மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
குழவிக்கல்லை போட்டு கொலை
அப்போது, ரமேஷின் தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் அவரது மனைவி ஒப்புக்கொண்டார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
என்னை என் பெற்றோர் கட்டாயப்படுத்தி ரமேசுக்கு திருமணம் செய்துவைத்தனர். அவர் வழுக்கை தலையாக இருந்ததால் எனக்கு அவருடன் வாழ பிடிக்கவில்லை. எனது கணவரை பார்த்து என்னிடம் சிலர் கேலி செய்தனர். தாம்பத்திய வாழ்க்கையிலும் ரமேஷ் என்னை சந்தோஷப்படுத்தவில்லை. இதனால் எனக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.
நாடகமாடினேன்
எனது தாய் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நானும், ரமேசும் இந்த வீட்டிற்கு வந்துவிட்டோம். அப்போது, நாங்கள் தனியாக இருந்ததால், என்னை தாம்பத்தியத்துக்கு ரமேஷ் அழைத்தார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். இதனால் அவர் என் மீது கோபமடைந்து, என்னுடைய அம்மாவை ஆபாசமாக திட்டினார்.
இதில் ஆத்திரமடைந்த எனக்கும், அவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர், நான் அவரை சமாதானப்படுத்தினேன். இதில் ரமேஷ் அமைதியாக சென்று படுத்து தூங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். அதன்படி, வீட்டில் இருந்த கிரைண்டர் குழவிக்கல்லை எடுத்து, ரமேஷின் தலையில் போட்டேன். அதில் அவர் தலைநசுங்கி இறந்தார்.
அதன்பிறகு நான், மாமியார் ராணியிடம் வெளியே இருந்து வந்த ஒருவர் அவரை கொலை செய்ததாக கூறி நாடகமாடினேன். ஆனால், போலீசாருக்கு என்மேல் சந்தேகம் எழுந்து, என்னிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதால் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அந்த இளம்பெண் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷின் மனைவியை கைது செய்தனர். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறார் காப்பகத்தில் அடைத்தனர்.
திருமணமான 9-வது நாளிலேயே கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment