Monday, April 3, 2017

 ஆர்.கே.நகருக்கு 'அள்ளப்பட்ட' வேலூர் பிரியாணி மாஸ்டர்கள்

வேலுார்: ஆர்.கே.நகருக்கு பிரியாணி மாஸ்டர்களை அழைத்து சென்றதால், வேலுார் மாவட்டத்தில், மாஸ்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எப்போது, எங்கு இடைத்தேர்தல் நடந்தாலும், அங்குள்ள கட்சியினர், தொகுதி மக்களுக்கு பிரியாணி சமைத்து போட, வேலுார் மாவட்டத்தில் இருந்து தான், பிரியாணி மாஸ்டர்களை அழைத்து செல்வது வழக்கம்.இதன்படி, தற்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு, தினகரன் அணி சார்பில், வேலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், 102 பிரியாணி மாஸ்டர்களை அழைத்துச் சென்றுள்ளனர். அதேபோல், பன்னீர் அணி சார்பில், 68 பிரியாணி மாஸ்டர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

வேலுார் மாவட்ட பிரியாணி மாஸ்டர்கள் நலச்சங்க தலைவர் ஆம்பூர் அபுபக்கர் கூறுகையில், ''இரு அணியினரும் போட்டி போட்டு, பிரியாணி மாஸ்டர்களை அழைத்துச் சென்றதால், வேலுார் மாவட்டத்தில், பிரியாணி மாஸ்டர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது; இருக்கும் ஒரு சிலரும் கூடுதல் சம்பளம் கேட்கின்றனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024