Saturday, April 8, 2017

 வெளியே வேலை செய்ய திகார் கைதிகளுக்கு வாய்ப்பு
 
புதுடில்லி: திகார் சிறையில் உள்ள கைதிகள் முதல் முறையாக, வளாகத்திற்கு வெளியில் வேலைக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர். கொலை மற்றும் இதர குற்ற சம்பவங்களில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள், டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறை வளாகத்தில் இருந்து வெளியில் சென்று டில்லியில் எங்கு வேண்டுமானாலும் வேலைக்கு செல்ல அனுமதி உண்டு. காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை, இவர்கள் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவர். ஆனால், இதற்கு சில தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தங்களுடைய தண்டனை காலத்தில், சிறை எண், 2ல், 12 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

அவர்களின் நன்னடத்தையை பொறுத்து, பாதி திறந்தவெளி சிறைக்கு மாற்றப்படுவர்.
இவர்களில் சிறந்த கைதிகளை தேர்ந்தெடுத்து, சிறை வளாகத்திற்கு வெளியில் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். தற்போது, பாதி திறந்தவெளி சிறையில், 78 கைதிகள் உள்ளனர். அவர்களில், சிறை வளாகத்திற்கு வெளியில் சென்று வேலை செய்வதற்காக, ஆறு பேரை திகார் சிறை கமிட்டி தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள், வெளியில் சென்று வேலை தேட வேண்டியதில்லை; அவர்களுக்கு சிறை நிர்வாகமே வேலை வாய்ப்பை பெற்றுத் தரும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024