நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா?... அப்ப துடைப்பத்தால் அடி வாங்குங்க!
ஓசூரை அருகே உள்ள தர்மராஜா கோயில் திருவிழாவில் துடைப்பம், முறத்தால் அடித்து நூதன முறையில் வழிபாடு நடத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி: ஓசூரை அடுத்த டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள தர்மராஜா சுவாமி கோயில் தேர்த் திருவிழாவில் துடைப்படம், முறத்தால் அடித்து வழிபாடு நடத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. இந்த கிராமத்தில் உள்ள பழமையான தர்மராஜா சுவாமி கோயில் உள்ளது. இங்கு தேர்த் திருவிழா மற்றும் மஞ்சு விரட்டு விழா, கடந்த, 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
. அதைத்தொடர்ந்து, சித்திரை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தர்மராஜா சுவாமி மற்றும் திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று தேரோட்டம் நடந்தது. 377-ஆம் ஆண்டாக நடைபெற்ற தேர் திருவிழாவில் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. தேர் திருவிழாவின்போது துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியின்போது பெண் வேடமணிந்து வந்த பூசாமி சாமி ஆடியவாறு பழைய துடைப்பம், முறத்தால் அடிவாங்குவதற்கு கூடி நின்ற பக்தர்கள் தலையில் அடித்தார். இதில் சிறியவர்கள் முதல் ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் அடிவாங்கினர்.
பூசாரியிடம் பழைய துடைப்பம் முறத்தால் அடிவாங்கினால் பேய், காத்து கருப்பு அண்டாது. நினைத்த காரியங்கள் கைகூடும். திருமணம் தடை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கொழிக்கும் என்பது கிராமமக்களின் நம்பிக்கையாகும். இதைத் தொடர்ந்து இன்று திரௌபதி அம்மன் அக்னி குண்ட தீமிதி பிரவேசம், பூங்கரகம், வாண வேடிக்கை, சிலம்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/different-temple-function-done-krishnagiri-280365.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/different-temple-function-done-krishnagiri-280365.html
No comments:
Post a Comment