Monday, April 10, 2017

இரண்டுக்கு மேல் இருந்தால் அசாமில் அரசு வேலை 'கட்'

கவுகாத்தி: அசாமில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்கள், அரசு பணிகளில் சேர தடை விதிக்கும் வரைவு கொள்கையை, அம்மாநில அரசு, நேற்று அறிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சர்பானந்த சோனவால் முதல்வராக உள்ளார். இந்நிலையில், அசாமில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய வரைவு கொள்கை நேற்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அம்மாநில, சுகாதாரத்துறை அமைச்சர் ஹேமானந்த பிஸ்வா கூறியதாவது:

அசாமில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில், புதிய வரைவு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசு வேலை கிடையாது; இதன் பின் அரசு வேலை பெறும் அனைவரும், தங்கள் பணிக்காலம் முழுவதும், இந்த நிபந்தனையை பின்பற்ற வேண்டும்.அரசு நலத்திட்ட உதவிகளை பெறவும், மாநில தேர்தல்
கமிஷன் மூலம் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என்ற நிபந்தனை பின்பற்றப்படும். அதேசமயம், இரண்டு குழந்தைகள்  மட்டும் வைத்திருப்பவர்களுக்கு இலவச கல்வி உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024