Thursday, April 6, 2017

ஒரு பணியிடம்; இரு டாக்டர்களுக்கு பணி ஆணை : மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மீது புகார்
dvertisement
மதுரை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மீது டாக்டர்கள் பல்வேறு ஊழல் புகார்களை தெரிவித்து வரும் நிலையில், ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேருக்கு பணி ஆணை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருந்தன. அவற்றை நிரப்ப கடந்த மாதம் இரண்டு
கட்டங்களாக கலந்தாய்வு நடந்தது. ஏற்கனவே வெவ்வேறு மருத்துவமனைகளில் பணியில் இருந்த அரசு டாக்டர்கள், தாங்கள் விரும்பிய இடத்தை பெறுவதற்காக முதல் கட்ட கலந்தாய்வும், மீதமுள்ள பணியிடங்களை புதிய டாக்டர்களை கொண்டு நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடந்தது. முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியிடத்தில் சேர்ந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கும் அதே பணியிடத்தை குறிப்பிட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ., விசாரணை வேண்டும் : சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருச்சி, கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு பணி நியமன குளறுபடிகள் நடந்துள்ளன. இதற்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்ற புதிய டாக்டர்களிடம் லஞ்சம் பெற்றதே காரணமாகும்.

அவர்களை திருப்திப்படுத்த முதல்கட்ட கலந்தாய்வில் பணி ஆணை பெற்ற டாக்டர்களை வலுக்கட்டாயமாக வேறு பணியிடங்களுக்கு மாற்றும் முயற்சி நடந்தது.அவர்கள் அதனை  ஏற்க மறுத்த நிலையில், ஏற்கனவே அங்கு பணியில் இருந்த வேறு டாக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். லஞ்சம் கொடுத்தவர்களை எவ்வித பிரச்னையும் இன்றி அவர்கள் விரும்பிய பணியிடத்தில் நியமிப்பதற்காகவே, பெரும்பாலான காலிப் பணியிடங்கள் கணக்கில் காட்டப்படுவதில்லை, என்றார்.வாரியத்தின் செயல்பாடு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அதனை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, கோரிக்கைகள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024