Sunday, April 15, 2018

ஓய்வு பெறும் வரை பதவி உயர்வு இல்லை அரசு சித்த மருத்துவர்கள் விரக்தி

Added : ஏப் 15, 2018 04:24

கம்பம்:''பதவி உயர்வு, சம்பளம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது'' என, அரசு சித்த மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மருத்துவத் துறையில் அலோபதி, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அலோபதி டாக்டர்கள், சித்த மருத்துவர்கள் பணியில் உள்ளனர். தமிழ்நாட்டில் 700 அரசு சித்த மருத்துவர்கள் உள்ளனர்.அலோபதி டாக்டர்களுக்கு உதவிஅறுவை சிகிச்சையாளரில் இருந்து மருத்துவ இணை இயக்குநர் வரை பதவி உயர்வு, ஊதிய உயர்வும் வழங்கப்படுகிறது.

ஆனால் உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) என்று பொறுப்பேற்கும் சித்த மருத்துவர்கள் 30 ஆண்டுகள் வரை பணி செய்கின்றனர். மாநில அளவில் 24 மட்டுமே உள்ள மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பதவி ஒருசிலருக்கு கிடைக்கிறது. மற்றவர்கள் உதவி மருத்துவ அலுவலராகவே ஓய்வு பெறுகின்றனர்.

சித்த மருத்துவர்கள் சிலர் கூறுகையில், '' கிராமங்களில் பணியாற்றும் அலோபதி டாக்டர்களுக்கு கிராம பணிபடி (அலவன்ஸ்) ரூ. 3 ஆயிரம் கிடைக்கிறது. அதே கிராமத்தில் பணியாற்றும் சித்த மருத்துவர்களுக்கு இந்த தொகை கிடையாது. நீண்டகாலமாக நிலவும் இந்த அவலநிலையை போக்க அரசு முன்வர வேண்டும்'' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024