வரும், 10ல் 2ம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்
Added : ஆக 08, 2018 01:04சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 10 முதல், 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து, வகுப்புகள் துவக்கப் பட்டுள்ளன. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 10 முதல், 12ம் தேதி வரை, சென்னை, ஒமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ தேர்வு குழு அதிகாரிகள் கூறியதாவது:அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இடங்கள் பெற்று, சேராதவர்கள் பற்றிய விவரங்கள், ஓரிரு நாளில் தெரிய வரும். அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கில் நிரம்பாத இடங்களின் விபரம் இன்று தெரிய வரும். இதன் அடிப்படையில், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான, முழுமையான அட்டவணை வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment