Monday, August 6, 2018


5ஜி செல்போனை அறிமுகம் செய்த மோட்டோ!


மோட்டோ நிறுவனம் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் செய்யக்கூடிய மோட்டோ இஸட் 3 என்னும் புதிய மாடல் செல்போனை சிகாகோவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

செல்போன் வர்த்தகத்தில் குறிப்பிடத்தகுந்த இடத்திலிருக்கும் மோட்டோ நிறுவனம் மற்ற நிறுவனங்களிலிருந்து மாறுபட்ட புதிய அம்சங்களைத் தனது தயாரிப்புகளில் கொண்டுவர முயற்சி செய்கிறது. அந்தவகையில் தற்போது மோட்டோ இஸட் 3 என்னும் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த தலைமுறை நெட்வொர்க்கான 5ஜி, இதில் சப்போர்ட் ஆகும் வண்ணம் தயாரிக்கப்பட்டிருப்பது முக்கியமான இதன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் தற்போதைய நிலவரங்களின்படி,வெரிஸான் என்னும் நிறுவனத்தின் 5ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் சப்போர்ட் செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. மற்ற நிறுவன 5ஜி சேவை பற்றி தெரிவிக்கப்படவில்லை.

சிறப்புகள்

6 இன்ச் திரை, 8.1 ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம்,835 SoC, 8 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா, 12 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா, 4GB RAM, 64 GB ROM ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.33,000. வெரிஸானில் பிரத்யேகமாக ஆகஸ்ட் 16 முதல் விற்பனைக்கு வருகிறது.

Posted by SSTA

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...