Tuesday, January 1, 2019

புதுச்சேரி பல்கலைக்கு மத்திய அரசு ரூ.1.49 கோடி நிதியுதவி

Added : ஜன 01, 2019 02:05


புதுச்சேரி:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ள 1.49 கோடி நிதி உதவியை மத்திய அரசு அளித்துள்ளது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை, உயர் கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கு நிதி உதவியை அளித்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சி மனப்பான்மையை ஏற்படுத்தி வருகிறது.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைக்கு, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, ரூபாய் 1.49 கோடி நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த நிதி உதவி ஐந்தாண்டுகளுக்கு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக,புதுச்சேரிபல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆராய்ச்சி மேம்பாட்டு நிதி உதவியிலிருந்து,உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையில் எம்.எஸ்சி., பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்ற மாணவர்களுக்கு தேவையான பன்னாட்டு தரத்திலான அல்ட்ரா சென்டிரிவியுஜ் மற்றும் ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர் போன்ற உலகத் தரத்திலான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான, ஆய்வு கூடத்திற்கு தேவையான பொருள்களை கொள்முதல் செய்ய முடியும்.மேலும், இந்த நிதியை பயன்படுத்தி,குளிரூட்டப்பட்ட ஆய்வுக் கூடங்களையும், திசு பாதுகாப்பு அறைகளையும் மற்றும் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஆய்வகங்களையும் புதியதாக நிறுவ முடியும். உலகத்தரத்திலான ஆய்வுகளில் புதிய உத்திகளைக் கையாண்டு அரிய ஆராய்ச்சிளைக் கண்டு பிடித்தால், மத்திய அரசின் இந்த நிதி உதவி தொடர்ந்து கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.இந்த நிதி இரண்டு முறை,பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசின் நிதி நல்கைக்குழுவும் (யு.ஜி.சி.,) ஆராய்ச்சிகளை மேம்படுத்த இதே துறைக்கு ஏற்கனவே சிறப்பு கூறுத் திட்டத்தின் கீழ் நிதி உதவியை அளித்துள்ளது.இந்தத் துறையில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றவர்களில் பலர் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதற்காக தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...