Tuesday, January 15, 2019

ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது : பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்

புதுடில்லி,: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டில், 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, வரி விலக்கு அளிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.




பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசின் பதவிக்காலம், மே மாதம் முடிவுக்கு வருகிறது. வரும் ஏப்ரல் மற்றும் மே  மாதத்தில், லோக்சபாவுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், மோடி அரசின் கடைசிபட்ஜெட், வரும், பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. சமீபத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, பார்லியில் நிறைவேறியது.

இந்நிலையில், மத்திய வருவாய் பிரிவினரை கவரும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரையிலானஆண்டு வருமானத்துக்கு, வரி விலக்கு அளிக்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும், என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான, ஆண்டு   வருமானத்துக்கு, வரி கிடையாது. முதல் மூன்று பட்ஜெட்களில், சில வரி சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், கடந்த பட்ஜெட்டில், எந்த வரிச் சலுகையும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில், போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுக்காக, 40 ஆயிரம் ரூபாயை, நிரந்தரக் கழிவாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...