Wednesday, July 24, 2019

சேலம் புதிய பாலத்தில் முதல் விபத்து 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Added : ஜூலை 24, 2019 01:23




சேலம்:சேலம், திருவாக்கவுண்டனுார் பைபாஸ் மேம்பாலத்தில், லாரிகள் மோதிய விபத்தில், ஏழு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், மேச்சேரி அடுத்த, கூத்தனுாரைச் சேர்ந்தவர் குப்புசாமி, 28; செங்கற்களை லாரியில் ஏற்றி, நேற்று அதிகாலை, நாமக்கல் நோக்கி ஓட்டிச் சென்றார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 35; கிரானைட் கற்களை, லாரியில் ஏற்றி, திருச்சி, மணப்பாறைக்கு, சேலம் வழியாக, லாரியை ஓட்டிச் சென்றார்.இரு லாரிகளும், நேற்று அதிகாலை, 4:20 மணிக்கு, திருவாக்கவுண்டனுார் பைபாஸ் புதிய மேம்பாலத்தில் வந்தன.குப்புசாமி லாரியை, ஆறுமுகம் முந்த முயன்றார். அப்போது, லாரியின் பின்புறம் மோதியது. இதில், ஆறுமுகம், குப்புசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை, பிற வாகன ஓட்டிகள் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தால், கிரானைட் கற்கள், சாலையில் விழுந்து சிதறின. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பாலத்தின் ஒரு பகுதியில், வாகனங்களை இயக்க தடை விதித்தனர்.சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த பாலத்தில் நடந்த முதல் விபத்தால், அதிகாலை, 4:30 முதல், பகல், 11:30 மணி வரை, பாலத்தின் ஒரு பகுதியில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விபத்தில் சிக்கிய இரு லாரிகளும், பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு, போக்குவரத்து துவங்கியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024