Wednesday, July 17, 2019

அத்திவரதர் - மதுரை ரவுடிக்கு முதல் மரியாதை

Added : ஜூலை 17, 2019 02:34

சென்னை : அத்திவரதர் தரிசனத்தில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கும் அவரது ஆட்களுக்கும் முதல் மரியாதை தரப்பட்ட சம்பவம் போலீஸ் பாதுகாப்பை கேலிக்குரியாக்கி உள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் அத்திவரதர் காட்சி அளித்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு பின் இந்த வைபவம் நடைபெறுவதால் லட்சக்கணக்கானோர் பல மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.இந்நிலையில் மதுரை வரிச்சியூரைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வம் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் எந்த தாமதமும் இன்றி குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளுடன் சென்று அத்திவரதரை தரிசித்தார்.

முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் முதல் மரியாதை அவருக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் அளிக்கப்பட்டது. அத்திவரதர் முன் அமர வைக்கப்பட்டு பரிவட்டம் கட்டி வரிச்சியூர் செல்வத்தை அங்கிருந்த அர்ச்சகர்கள் கவுரவித்த காட்சி சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி உள்ளது.கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என பல வழக்குகளில் சிக்கிய செல்வத்திற்கு கோவில் நிர்வாகத்தார் மரியாதை அளித்து சிறப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது போலீசாரின் பாதுகாப்பு குளறுபடியை அம்பலப்படுத்துவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.ரவுடி செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு வி.வி.ஐ.பி. நுழைவு சீட்டு கிடைக்க ஏற்பாடு செய்தது யார்; அனுமதி அளித்த போலீசார் யார் என்பது குறித்து டி.ஜி.பி. அலுவலக உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024