Thursday, July 18, 2019

இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி சித்தா படிப்புக்கு எப்போது

Added : ஜூலை 17, 2019 23:30

சென்னை, யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள். சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கு இன்னும் விண்ணப்பம் வழங்கப் படவில்லை.யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கு அரசு மருத்துவ கல்லுாரியில் 60; தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு 358; நிர்வாகஒதுக்கீட்டுக்கு 192இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சென்னை - அரும்பாக்கம்; திருநெல்வேலி - பாளையங்கோட்டை; மதுரை - திருமங்கலம்; நாகர்கோவில் - கோட்டார் ஆகிய நான்கு மருத்துவ கல்லுாரிகளில் வினியோகிக்கப்படுகிறது.மேலும் www.tnhealth.org என்ற இணையளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். விண்ணப்பங்கள்பெற நாளை கடைசி நாள்.சித்தாவுக்கு எப்போது?இந்நிலையில் சித்தா ஆயுர்வேதம் யுனானி ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கு இன்னும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படாதது குழப்பத்தை ஏற்படுத்திஉள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:சித்தா ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ்.கவுன்சிலிங் முடிந்த பின் சித்தா படிப்பிற்கான விண்ணப்பங்கள் வினியோகித்து கவுன்சிலிங்நடத்தப்படும். இவ்வாறு அவர்கள்கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024