ரயில் கால அட்டவணை புத்தகம்
Added : ஜூலை 17, 2019 23:39
சென்னை, தெற்கு ரயில்வேயின், புதிய ரயில் கால அட்டவணை புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது.தெற்கு ரயில்வே 2019 - 20க்கான புதிய ரயில் கால அட்டவணை இம்மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னையில் இருந்து புறப்படும்; வந்து செல்லும் 49 ரயில்கள் 5 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இயக்கப்படும் 117 புறநகர் ரயில்களின் நேரம் 5 நிமிடங்களில் இருந்து 45 நிமிடங்கள் வரை மாற்றப்பட்டுள்ளது. அரக்கோணம் - செங்கல்பட்டு; காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - தாம்பரத்திற்கு, தலா, இரண்டு புறநகர் மின்சார ரயில்கள் புதிதாக இயக்கப்படுகின்றன.தெற்கு ரயில்வே எக்ஸ்பிரஸ் மற்றும் பயணியர் ரயில்களின் கால அட்டவணை மட்டும் இணைய தளத்தில் வெளியானது. ரயில் கால அட்டவணை தயாரிப்பு தாமதத்தால் விற்பனைக்கு வைக்கப்படவில்லை. தற்போது தெற்கு ரயில்வேயின் புதிய ரயில் கால அட்டவணை புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது.இதில், தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே மற்றும் கொங்கன் ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்கள் விபரம் இடம்பெற்றுள்ளது. புத்தகத்தின் விலை 40 ரூபாய். ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் கிடைக்கும்.சென்னை புறநகர் மின்சார ரயில்களின் கால அட்டவணை ரயில்வே இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணை புத்தகம், இன்னும் ஒரு வாரத்தில், 5 ரூபாய் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment