Saturday, July 13, 2019

மருத்துவம் படிக்க, 'சீட்' கிடைத்தும் பணமின்றி பரிதவிக்கும் மாணவி

Updated : ஜூலை 13, 2019 06:33 | Added : ஜூலை 13, 2019 02:08




திருக்கோவிலுார்:திருக்கோவிலுாரைச் சேர்ந்த, ஏழை மாணவிக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், பணமின்றி பரிதவிக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார், கணக்குப் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர், ஸ்ரீதேவி, 18; இவரது தந்தை, 10 ஆண்டு களுக்கு முன், இறந்து விட்டார். 6 லட்சம் ரூபாய்தாய் ராணி, தையல் தொழில் செய்து, மகள் ஸ்ரீதேவி, மகன் புகழேந்தி, 16, ஆகியோரை, கடும் நிதி நெருக்கடியில், படிக்க வைத்து வருகிறார்.

ஸ்ரீதேவி, திருக்கோவிலுார், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2015- - 16ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு தேர்வில், 492 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகள் வரிசையில், மாவட்ட அளவில், இரண்டாம் இடம் பெற்றார்.இதேபோல், பிளஸ் 2 தேர்வில், 1,131 மதிப்பெண்களுடன், 'நீட்' தேர்வில், 462 மதிப்பெண்கள் பெற்றார். நேற்று முன்தினம் நடந்த மருத்துவ கலந்தாய்வில், திருச்சி, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரியில், இடம் கிடைத்தது.

இன்று, கல்லுாரியில் சேர்வதற்கான கடைசி நாள் என்ற நிலையில், கல்வி கட்டணம் மற்றும் தங்கும் விடுதி கட்டணம் உட்பட, 6 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால், பணத்திற்கு என்ன செய்வது என தெரியாமல், ஸ்ரீதேவியும், தாய் ராணியும் பரிதவித்து வருகின்றனர்.

உதவிக்கரம்

இவருக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், இவரது தாய் ராணியை, 96988 - 22371 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வங்கியில் பணம் செலுத்த விரும்புவோர், ராணி, திருக்கோவிலுார் பாரத ஸ்டேட் பாங்க், வங்கி கணக்கு எண்: 20096436547 என்ற எண்ணில், செலுத்தலாம்.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...