அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு
Added : செப் 18, 2019 00:10
சென்னை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், குலசேகரப்பட்டினம், மேல்மலையனுார், திருவக்கரை ஆகிய, அம்மன் கோவில்களுக்கு, ஆன்மிக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குலசேகரப்பட்டினம்விஜயதசமியை முன்னிட்டு, சென்னை, வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து, அக்., 4ம் தேதி இரவு, 8:00 மணிக்கு புறப்படும் சுற்றுலா வாகனம், மறுநாள் காலை, 6:00 மணிக்கு, திருச்செந்துார் சென்றடையும்.காலை உணவுக்கு பின், குலசேகரப்பட்டினம், முத்தாரம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டு, தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.பின், திருச்செந்துார் முருகன் கோவில் தரிசனம் முடித்து, மாலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, இரவு, 9:00 மணிக்கு மதுரை வந்து சேரும். அங்கு, பயணியர், தமிழ்நாடு ஓட்டலில் தங்க வைக்கப்படுவர். மறுநாள், அழகர்கோவில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால் பார்வையிடலாம். இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:00 மணிக்கு சென்னை வந்தடையும்.சுற்றுலா கட்டணமாக, நபருக்கு, 5,400 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மேல்மலையனுார்ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று, இந்த சுற்றுலா நடத்தப்படும். சென்னையில் இருந்து காலை, 6:30 மணிக்கு புறப்பட்டு, காலை, 11:00 மணிக்கு, மேல்மலையனுார் சென்றடையும். தரிசனம் முடித்து, மதியம், 2:00 மணிக்கு கிளம்பி, மாலை, 3:30 மணிக்கு, பயணியர் மேல்மருவத்துார் அழைத்து செல்லப்படுவர்.அங்கு தரிசனம் முடித்து, இரவு, 7:00 மணிக்கு, சென்னை வரலாம். இதற்கான கட்டணம், நபருக்கு, 975 ரூபாய்.
திருவக்கரைஒவ்வொரு மாதம் பவுர்ணமி அன்று, சென்னை அலுவலகத்தில் இருந்து, காலை, 6:30 மணிக்கு புறப்படும் வாகனம், திருவக்கரை, வக்கரகாளி அம்மன் கோவிலுக்கு, காலை, 10:30 மணிக்கு சென்று சேரும். பகல், 12:30 மணிக்கு, மயிலம் முருகன் கோவில் தரிசனம் முடித்து, மதியம், 2:00 மணிக்கு, மேல்மருவத்துார் வந்தடையும், அங்கு தரிசனம் முடித்து, மாலை, 5:00 மணிக்கு சென்னை வரலாம். இதற்கான கட்டணம், தலா, 975 ரூபாய்.
இந்த ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்புவோர், www.ttdconline.com மற்றும் www.tamilnadutourism.org என்ற, இணையதளம் மற்றும், 044- - 2533 3333, 2533 3444, 2533 3850-54 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும், 1800 4253 1111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment