சர்க்கரை கார்டுக்கு இலவச அரிசி
Added : செப் 18, 2019 00:14
மக்களின் ஆதரவை பெறவும், எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை முறியடிக்கவும், ரேஷன் கடைகளில், சர்க்கரை கார்டுதாரர்களுக்கும், இலவச அரிசி வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில், 1.90 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதம்தோறும் இலவச அரிசி மற்றும் கோதுமை; குறைந்த விலையில், சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்படுகின்றன.அதேநேரத்தில், 10 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி கிடையாது.மத்திய அரசு, 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' என்ற, திட்டத்தை துவக்கியுள்ளது.இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டு வைத்துள்ள பிற மாநிலத்தவர்கள், தமிழக ரேஷன் கடைகளில், உணவு பொருட்களை வாங்குவதுடன், தமிழக ரேஷன் கார்டுதாரர்களும், மற்ற மாநிலங்களில் பொருட்களை வாங்கலாம். ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷனில் பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கும் போது, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகளுக்கு, பணம் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், அந்த கார்டுகளையும் அரிசி கார்டுகளாக மாற்றி, பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, கூடுதல் செலவாகும் என்பதால், அதை செயல்படுத்தவில்லை.தற்போது, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், பிற மாநிலத்தவருக்கு, அரிசி அல்லது கோதுமை வழங்கினால், அதற்கு, அவர்களின் மாநிலங்களில், என்ன விலைக்கு உள்ளதோ, அதே விலை, தமிழகத்தில் வசூலிக்கப்படும்.இதனால், தமிழக சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கேட்க வாய்ப்புள்ளது. ஒரே ரேஷன் திட்டத்திற்கு எதிராக, எதிர்கட்சிகள் போராட்டங்களையும் அறிவித்து வருகின்றன.எனவே, சர்க்கரை கார்டுதாரர்களின் ஆதரவை பெறவும், எதிர்கட்சிகளின் போராட்டங்களை முறியடிக்கவும், சர்க்கரை கார்டுகளுக்கும், இலவசமாக அரிசி வழங்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.அரிசி எவ்வளவு?அரிசி கார்டுகளுக்கு, மாதம் தலா, 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தமிழகத்தில், 2016 நவம்பரில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, நான்கு உறுப்பினர் உள்ள கார்டுக்கு, 20 கிலோவும்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. - நமது நிருபர் -

No comments:
Post a Comment