Friday, February 7, 2020

சிலிண்டருக்கு சரியான விலை கிடைக்க டிஜிட்டல் பேமென்ட்

Added : பிப் 07, 2020 04:32

கோவை:இண்டேன் சிலிண்டருக்குரிய சரியான விலையை வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் பேமன்ட் மூலம் செலுத்தும்படி, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.இதன்படி, சிலிண்டர் புக் செய்தவுடன், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு, http://payit.cc/L1xxxxxx என்ற ஆன்லைனில், பணம் செலுத்துவதற்கான 'லிங்க்' அனுப்பி வைக்கப்படும். இந்த லிங்கை கிளிக் செய்து, சிலிண்டருக்கான சரியான தொகையை, நெட் பேங்கிங், இ - வாலட், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு போன்ற ஆன்லைன் பேமன்ட் வழிமுறைகள் வாயிலாக செலுத்தலாம். இதன்மூலம், சிலிண்டர் டெலிவரிக்கு பின் வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் தகவல்களுக்கு, 0422 - 224 7396, 224 0696 ஆகிய எண்களில் அழைக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024