Friday, February 7, 2020

தூக்கு தண்டனை நிறைவேறுமா?; 'நிர்பயா வழக்கு இன்று விசாரணை

Updated : பிப் 07, 2020 06:45 | Added : பிப் 07, 2020 06:41

புதுடில்லி: 'நிர்பயா' வழக்கில், குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து, டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் பஸ்சில் இருந்து துாக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டில்லி திகார் சிறையில், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

கருணை மனு, மறு சீராய்வு மனு என, நான்கு பேரும், மாறி மாறி மனு தாக்கல் செய்து வருவதால், தண்டனையை நிறைவேற்றுவது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. கருணை மனுஇது தொடர்பான வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவு: குற்றவாளிகளில் நான்கு பேருக்கும் ஒரே நேரத்தில் தான் துாக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மட்டும், முதலில் தண்டனையை நிறைவேற்றுவது, மற்றவர்களுக்கு அதன் பின் தண்டனையை நிறைவேற்றுவது என்பது, சட்ட ரீதியாக சரியாக இருக்காது. எனவே, அடுத்த ஏழு நாட்களுக்குள், குற்றவாளிகள் தரப்பிலிருந்து வேறு புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால், எந்தவித தாமதமும் இன்றி தண்டனையை நிறைவேற்றலாம். அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நிராகரிப்புஇதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், 'குற்றவாளிகளில் நான்கு பேரில், மூன்று பேரின் கருணை மனுக்கள், மறு சீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. 'ஆனாலும், இந்த மூன்று பேருக்கும் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, தண்டனையை தாமதமின்றி நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள், என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று பரிசீலனைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

சிறை அதிகாரிகள் மனு

குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள டில்லி திகார் சிறையின் அதிகாரிகள் சார்பில், டில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்ற, புதிய, 'வாரன்ட்' பிறப்பிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது. இந்த மனு தொடர்பாக, இன்றுக்குள் பதில் அளிக்கும்படி, நான்கு குற்றவாளிகளுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024