Wednesday, February 12, 2020

வரவேற்பு இல்லாததால் நெல்லை - தாம்பரம் ரயில் ரத்து

Added : பிப் 12, 2020 01:37

சென்னை : பயணியரிடம் போதிய வரவேற்பு இல்லாததால், திருநெல்வேலி - தாம்பரம் இடையே இயக்க வேண்டிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு, பிப். 20ம் தேதி மாலை, 5:45க்கும், தாம்பரத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு, 21ம் தேதி மாலை, 6:00 மணிக்கும், வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த ரயில்களுக்கு, பயணியரிடம் போதிய வரவேற்பு இல்லாததால், ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காரணம் என்ன

இந்த ரயில்கள் தென்காசி வழியாக, சுற்றிச் செல்லும் என, அறிவிக்கப்பட்டதாலும், நெல்லை எக்ஸ்பிரசை விட, பயண நேரம் ஐந்து மணி நேரம் அதிகம் என்பதாலும், கட்டணமும் அதிகமாக இருந்ததாலும், பயணியரிடம் வரவேற்பு கிடைக்காமல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024