மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம்
Added : பிப் 13, 2020 22:55
சென்னை: நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, மேட்டுப்பாளையத்துக்கு, இரவு, 8:55க்கு, நீலகிரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், ஜூன், 11 முதல் நேரம் மாற்றப்பட்டு, இரவு, 9:05 மணிக்கு இயக்கப்படும்; மேட்டுப்பாளையத்துக்கு காலை, 6:15க்கு சென்றடையும் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலுக்கு, வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், இரவு, 8:20க்கு இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் நேரம் மாற்றப்பட்டு, ஜூன், 13ல் இருந்து, இரவு, 8:00க்கு புறப்படும். சென்னைக்கு பகல், 12:15 மணிக்கு வந்தடையும் சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, கேரள மாநிலம், ஆலப்புழாவுக்கு தினமும், இரவு, 9:05க்கு சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், ஜூன், 11 முதல் நேரம் மாற்றப்பட்டு, இரவு, 8:55 மணிக்கு இயக்கப்படும். ஆலப்புழாவுக்கு மறுநாள் காலை, 10:40க்கு சென்றடையும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment