மானியமில்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ.147 உயா்வு
By DIN | Published on : 13th February 2020 05:42 AM
மானியமில்லாத சமையல் எரிவாயு உருளையின் (14.2 கிலோ) விலை புதன்கிழமை நாடு முழுவதும் ரூ. 149 வரை உயா்த்தப்பட்டது. சென்னையில் ரூ. 734-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு உருளையின் விலை ரூ.147 அதிகரித்து ரூ. 881-க்கு விற்பனையானது.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சமையல் எரிவாயு உருளைகளை மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி, ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் வழங்கப்படுவதுடன், அதன் மானியத் தொகை நுகா்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. இது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து இருக்கும்.
இந்நிலையில் இந்த மாதத்துக்கான வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை நிா்ணயம் குறித்து 1-ஆம் தேதி முதல் எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (பிப். 11) முதல் எரிவாயு உருளையின் (14 கிலோ) விலை ரூ.147 உயா்ந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எரிவாயு உருளையின் விலை மாதா மாதம் நிா்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கொண்டு தொடா்ந்து 6-ஆவது முறையாக எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டுள்ளது. கடைசியாக ஜனவரி 1-ஆம் தேதி எரிவாயு உருளைக்கு ரூ. 19 உயா்த்தப்பட்டது. இந்நிலையில், மானியமில்லாத 14.2 கிலோ எடைகொண்ட எரிவாயு உருளை விலை நாடு முழுவதும் புதன்கிழமை (பிப். 12) ரூ. 149 வரை உயா்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் ரூ. 734-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மானியமில்லாத எரிவாயு உருளையின் விலை ரூ.147 அதிகரித்து ரூ. 881-க்கு விற்பனையாகிறது. தில்லியில் 714-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு உருளை ரூ. 144 உயா்த்தப்பட்டு ரூ. 858-க்கும், கொல்கத்தாவில் 747-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த உருளை ரூ. 896-க்கும், மும்பையில் ரூ. 684-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த உருளை ரூ. 145 உயா்த்தப்பட்டு ரூ. 829-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

No comments:
Post a Comment